அந்திம அறுவடை
முன்பொருநாள் -
சிதறிவிழுந்த
சூரியத்துண்டில்
முளைத்தெழுந்த
மனிதப் பயிர்களின்
அந்திம அறுவடை நடக்கிறதோ ?
அங்கு மிஞ்சப் போவது எது ?
ரத்தச் சகதியில் ஊறிய
பித்து பிடித்த மானுடக் களைகளோ ?
மனிதத்துவத்தை
மண்ணால் புதைத்த
மாபெரும் கல்லறையோ ?
மாட்சிமைக்குரிய சூரியக் கோளமே !
சாட்சியாய் நீ மட்டும்தான் மிஞ்சுவாயா ?