விலையில்லா விலை - முரளி

கும்பிட்டு குந்த வெச்சு
கூப்பிட்டு இலவசம் தந்து
ஜேப்படி அடிச்சான் ஓட்டு - உன்
பாக்கெட் இருந்தா பாரு

எப்போவும் சிரிச்சிரு
ஏழையாவே இருந்திரு
என் சாமி நீதான்னாரு - ஏமாந்தியே
களட்டிப் புட்டான் நிஜாரு

உன்னைப் பரிதாப மாய்
உழைக்கப் பரிகார மாய்
உதவின்னு தருவாரு பாரு - அதை
உன் கிட்டே அடிச்ச தாரு?

உன் ஓட்டைப் பறிச்சு
உன் நாட்டை சுறண்டி
தன் வளம் பெருக்கி னாறு - அவரு
தந்தாரு நீ அடிக்க நூரு

மெய் மறந்து களியாட
தொலை நோக்கு மறந்திருக்க
பொட்டி ஒண்ணு தந்தாரு பாரு -அதில்
போடுவ தெல்லாம் பொய் உஷாரு

கை யேந்த வச்சிட்டு நீ
மை பொட்டு மயங்கிட்டு
ராஜான்னு நெனச்சுகின பாரு -அவரு
தாஜா செஞ்ச நீ பிச்சக் காரு

எங்கே நீ நிஜம் ஆறிய
உன் கை பலம் புரிய
யோசிக்கக் தடை போட்டதாரு - நீ
யாசிக்க இலவசங்கள் தந்தாரு

அவை விலை யில்லா வினைகள்
உன் விழி மறைக்கும் திரைகள்
மதி மயக்க காத்திருக்கு bar - நீ
மது நாடா வாழப் பாரூ

தினம் உழைக்க வேலையும்
பின் மெய் வருத்தக் கூலியும்
தினம் கிடைக்க கேட்டுப் பாரு - அவரு
தலை தெறிக்க ஓடிடு வாரு

ஜாதி மத பேரைச் சொல்லி
நாதி அற்ற மனிதர் களை
பேதப் பட்டு பிரிகக தடை போடு - அவர்
பேத லித்துப் போயிடு வாரு

உடல் உழைப்பால் வாராத
உடன் பலன்கள் யாவையுமே
உனதல்ல புரிந்து சாடு - இனி
உளம் நாடுமோ இலவசம் கூறு

உன் கையில் உழைப் போடு
உன் மனதில் உறுதி யோடு
ஊரோடு ஒத்துமையா வாழு - எவன்
யாசிக்க உனைத் தள்ளு வாரு ?

எழுதியவர் : முரளி (20-Dec-14, 10:59 pm)
பார்வை : 136

மேலே