ஜெயம் பெற வாழ்த்துகிறேன்

ஜெயம் பெறவே இன்று பிறந்தாய் !
தாய் காவிரி நீர் பருகி வளர்ந்தாய் !!
அரங்கனின் அரவணைப்பில்
அழகாய் உறங்குகிறாய் !!

அகத்தியர் கமண்டலத்தை அன்று
உருமாறி உருட்டிய விநாயகன் போல்
கம்பனின் எழுத்தாணி பிடுங்கி
நீ எழுதிய கவிதைகள் ஏராளம் !!
கருத்துக்கள் தருவதில் தாராளம்

அறிவுரை வழங்குவதில் நீ ஆசான்
அன்பு பாசத்தில் நீ அம்மா
அனைவரிடம் பழகுவதில் நல் மங்கை !
தோழி ஜெயராஜரத்தினமே
என்றென்றும் உனக்கு ஜெயமே !

வாழ்த்துக்கள் கூறிட வயதில்லை
முத்துக்கள் கோர்த்த மாலையில்
நீயோ ரத்தினமாக ஜொலிஜொலிக்க
நின் ஆசி வேண்டி வணங்குகிறேன் !!

(குறிப்பு -இன்று பிறந்த நாள் காணும் தோழி ஜெயராஜா ரத்தினம் அவர்களுக்கு வாழ்த்து )

எழுதியவர் : கனகரத்தினம் (21-Dec-14, 1:30 pm)
பார்வை : 249

மேலே