வரும் முன் காத்தேன் என்னை
சிரித்து பேசினாய் என்னிடம்
சிந்தித்தே பேசினேன் உன்னிடம்.
மறைத்து பேசினாய் என்னிடம்
மறந்தே பேசினேன் உன்னிடம்.
தொட்டு பேசினாய் என்னிடம்
தொடாமல் பேசினேன் உன்னிடம்.
தொடக்கத்திலே உன்னிடம்
தவறாய் தெரிந்தது என்னிடம். ..
கற்பு தொலைந்து விடுமோ உன்னிடம்
என மனம் தொலைவாய் செல் என்றது என்னிடம்.
தொல்லை செய்யாதே என்னை நீ
தொலைந்தே போய் விடு என்னை விட்டு.
வரும் முன் காத்து கொள்கிறேன்
என்னை நான்.