எப்படி சொல்வேனடா என் காதலை
எப்படி சொல்வேனடா என் காதலை...!
சண்டையும், சமாதானமுமாய்
அழுகையும், சந்தோசமுமாய்
என் எல்லா பொழுதுகளிலும்
அருகில் இருந்தவன்
நீ, நீ மட்டும் தானடா...!
ஒன்றாக இருந்த பொழுதெல்லாம்
வந்ததில்லையடா இந்த காதல்....!
என்னை விட்டு போன மறுகணமே
முழுவதுமாய் என்னை
ஆக்கிரமைகிறது அடிமைபடுத்துகிறது உன் காதல்...!
எப்படி சொல்வேனடா என் காதலை...!
ஒற்றை ரோஜாவில் என் காதலை சொல்லவா
கடிதத்தில் காதல் எழுதி தூது விடவா
இல்லை நாணத்தால் காலில் கோலமிட்டல் ஒப்புகொள்வாயா
இல்லை என்னை புரிந்துக்கொண்டு நீ வந்து சொல்வாயா
என்னடா செய்வேன்
எப்படியடா சொல்வேன் என் காதலை...!