நினைவுகள்
உன்னுடன் வந்தேன்,
உன்னுடன் இருப்பேன்,
உன்னுடனே வாழ்வேன்.
எனக்கு ,
நீ மட்டுமே விருப்பம்.
நீ மட்டுமே என் உலகம்.
உன் எண்ணங்களை பிரதிபலிக்க மட்டுமே,
நான் உயிருடன் வாழ்கிறேன்.
என்னோடு,
உன்னை தவிர,
வேறு யாரையும் சேர்த்து விடாதே.....
சந்தோசத்தின் மிகுதியில் நிறைவு தான்.
ஆனால்,
சோகம் வருகையில்,
என்னோடு சேர்த்து உனக்கும் கஷ்டம் தான்.