ஆசிரியர்களுக்கு அர்ப்பணம்…

அறிவென்ற உளியால்
சிலை வடிக்கும்
சிற்பியே!

அறியாமை இருள் நீக்கும்
ஒளி மிக்க சுடர்
சூரியனே!

சிப்பியின்றி முத்தாக்கும்
கலை கண்ட
அறிவுக் கடலே!

உயிருள்ள களிமண்ணை
தட்டிநல் உருவமாக்கும்
கைத் தேர்ந்த
வினைஞனே!

எங்களை விண்மீன்களை
ஒளிரச் செய்ய
ஊடகமாக இருக்கும்
பேரண்டமே!

நீங்கள் ஊட்டும்
அறிவுப் பாலைவிட,
தாய்ப்பால்!
திகட்டி விடுகிறதே!

உங்கள்,
பேச்சு மழையின்
ஒவ்வொரு துளியும்
அறிவு வித்து!.

கடவுளுக்கும் முதலானவர் நீர்!
நினதடி தொழுகின்றோம்.
நீவீர்!
வாழ்க பல்லாண்டு,
வாழிய, வாழியவே!

எழுதியவர் : கவிக்கண்ணன் (27-Dec-14, 10:30 pm)
பார்வை : 839

மேலே