கோபம் ஒரு தாய் மீது

கோபம் .............
பஸ் ஸ்டாண்டில் குழந்தையோடு
பிச்சையெடுக்கும் பெண்மணி மீது
கடுமையான கோபம்
நீ பிச்சை எடுக்கிறாய் - அது
உன் மடமை ,
உன் இயலாமை ,
உன் அறியாமை ,
உன் தாயின் முட்டாள் தனம்
ஏன் விதி என்று கூட வைத்துக்கொள்வோமே !
இந்த பிஞ்சுக்கு ஏனம்மா கையேந்த கற்றுக்கொடுக்கிறாய்
உன் பெற்றோர் செய்த தவறை
ஏன் நீயும் பின்பற்றுகிறாய்
ஏழையாய் பிறந்தது தவறல்ல!
உலகில் - செல்வந்தனாய் பிறந்தவர் எவருமில்லை
முட்டாளாய் பிறந்தவரும் எவரும் இல்லை
ஒரு தாயாக
உழைக்க கற்று கொடு
படிக்க சந்தர்ப்பம் கொடு
வாழ்கையில் போராட தைரியம் கொடு
தன்மானத்தோடு வாழ வாய்ப்பு கொடு
உன் பிள்ளையும் உயர்ந்த இலக்கை அடைவான்

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (28-Dec-14, 7:55 pm)
பார்வை : 86

மேலே