தமிழோடு --

மலைமலையாய் தமிழ் மோகம்
மனங்களிலே வாழும்
அலைகடலாய் பல சோகம்
அடிமனம் கண்ட போதும்

காற்றினில் கரைந்திடும் மேகம்
பின்பும் கலங்காதிருக்கும் வானம்
அது போல்
காலின் சுவடுகள் கரைந்த போதும்
கல்லின் சுவடாய் தமிழ்
காலம் கடந்தும் வாழும்

பேரலை கரங்களை
யார்கரம் தடுத்திடும்
தமிழ் பேரலையாய் -புது
பாதை வகுத்திடும்
அழிவில் அல்ல அளிப்பில்
மனங்கள் வெல்லும் களிப்பில்

குருவிச்சை மரங்களாய்
தமிழ் ஒட்டிய மொழிகள் பல
வழக்கொழிந்து போயினும்
ஆழ வேர்பதித்த தமிழ்
உலகாளும் வேளை வரும்

வீழ்வது போல் தமிழ் தோன்றும்
அது மீண்டும் வந்து உலகாளும்

எழுதியவர் : இணுவை லெனின் (31-Dec-14, 7:42 pm)
சேர்த்தது : இணுவை லெனின்
Tanglish : thamizh mogam
பார்வை : 143

மேலே