நண்பர் இராஜ்குமார் சொல்லிய காரணமில்லா கணக்குகள் என் கருத்து
உண்மை தான் நட்பே, கிடைக்கும் மதிபெண்களையேல்லாம் பார்த்தால் புரியாத புதிராக உள்ளது
ஒரு சில கவிதைகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர் பார்த்தால் அதற்கு கிடைக்காது
சாதாரணமான கவிதைகளுக்கு நிறைய மதிப்பெண்கள் கிடைக்கிறது
இது புதியதாக வரும் எழுத்தாளர்களுக்கு சற்று ஏமாற்றம் மற்றும் குழப்பமாக இருக்கிறது
அதே கவிதை, முகநூல் கவிதை தளத்தில் வெளியிடும்போது
நல்ல வரவேற்ப்புகிடைக்கிறது
ஆனால், கவிதை எழுத ஆர்வம் உள்ளவர்கள் மதிப்பெண்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எழுத்து தளத்தைவிட்டு சென்றாலும் வேறு எங்காவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்
கருத்துக்காக, மதிப்பெண்னுக்காக எழுதும் கவிதைகளை விட மனதிற்கு பிடித்து எழுதும் கவிதைதான் ஒரு படைப்பாளிக்கு சிறந்த மதிப்பெண்.
கருத்துக்காக, மதிப்பெண்னுக்காக எழுதும் கவிதைகள் போட்டிக்காகவும், விருதுக்காகவும் தான் இருக்கும் படைப்பாளியின் இதயத்தில் இடம் பெறாது.