பிரியும் நண்பர்கள்
பிரியும் நண்பர்கள்
வானம் ஒன்றாக
பூமியில் நன்றாக
வாழ்ந்தது நாமே
துன்பம் தனதாக
நம்மில் சிலராக
வேற்று என்னமாக
வாழ்ந்தோமே
கருவறையில் உருவானோம்
வகுப்பறையில் உறவாணோம்
தோல்வியில் தனியானோம்
வெற்றியில் ஏனோ கொண்டாடினோம்?
கடிகாரமே ஓ கடிகாரமே!
உன்னோடு இருந்த எண்கள்
பிரிந்தததே
நேரமே ஓ நேரமே!
வெறுப்போடு தெரிந்த முட்கள்
உடைந்ததே
நிமிடமே ஓ நிமிடமே!
இன்றோடு பிரிகிறோம்
காத்திரு
துக்கமே ஓ துக்கமே!
நேற்றோடு கூடினோம்
உன்னோடு
உன்னிடம் கடன்பெற்ற மூச்சுகள்
என்னோடு
நட்பிடம் தோல்வியுற்ற இழப்புகள்
மண்ணோடு
எதை கொடுத்தேன் உனக்கு
தெரியவில்லை
பாதை கொடுத்தாய் நீ
மாற்றமில்லை.
-மனக்கவிஞன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
