புத்தாண்டு
புதிதாக பூவொன்று
மொட்டு விரியக் காத்திருக்கிறது
அது என்ன பூ புது வருடம்
அப்பூ பூத்துக் குலுங்கும் காலம்
வந்து விட்டது வரவேற்க காத்திருப்போம்
அழகிய அன்பு மலராக
செல்வம் எல்லாம் செழித்து வரும்
செல்வச் சிறப்பான மலராக
ஆண்டொன்று மலரும் நேரம் நெருங்கி வருகிறது
ஆசை எல்லாம் நிறைவேற
அள்ளி வரும் சுபங்கள் திருமணங்கள்
தொழில் விருத்தி யாவும்
தொட்டது எல்லாம் துலங்க
பொன்னான ஆண்டொன்று மலர
நம் மனசெல்லாம் நிறைய
இன்பங்கள் பொங்கிட இனியன யாவும்
இனிதே நடந்திட புத்தாடை உடுத்தி
புத்தாண்டை வரவேற்போம்
இனி தோல்வி இல்லை எம்மவர்க்கு
வெற்றி மேல் வெற்றியே
ஆடிப் பாடி கொண்டாடி
ஆனந்தமாய் அக்களித்து
தீமை எல்லாம் அகற்ற வரும்
பொன் மலராம் புத்தாண்டின் நல்வரவை
ஆவலுடன் அணைத்து வரவேற்போம்
புத்தாண்டின் பூவாசம்
மனசெல்லாம் நிறைந்திடட்டும்
வருக வருக வளம் மிக்க, வரங்கள் மிக்க
பொன்னான புத்தாண்டே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
