திட்டம்
இன்றைக்கு இரவு..
எப்படியாவது
இவன் குரல்வளையை
நெரித்திட வேண்டுமென
அவர்கள் போட்ட திட்டம்..
இவன் வீட்டை சுற்றி சுற்றி வந்து
வேவு பார்த்து ..
விடியற்காலை நேரத்தில்
பக்கத்து மாடிப்படியேறி
மதில் தாண்டி
இவன் உயிர் குடிக்க
முடிவு செய்த காரணம்..
வீட்டுக்கு காவலும்
அதிகப்படியான செல்லமும்
தந்த மமதையால்
எப்போதும் வெறியேற்றி
குரைப்பதே இவனுக்கு
வேலை என்பதுதான்..!
எங்கள் நாய்க்குட்டியின்
சாமர்த்தியம் தெரியாமல்
இப்படியொரு..
திட்டமிட்ட தெரு நாய்களை
நகராட்சி வண்டி வந்து
அள்ளிக் கொண்டு போனபின்
முகமெல்லாம் பூரிப்பு ..
இவனுக்கு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
