இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்தை எல்லாம்
புன்னகைத்து தமிழில் சொல்வோம்
புது விடியலில் பூக்கள் போல
புதுமையாக உலகம் செய்வோம்.......!!

செவி விழி ஐம்புலன் அனைத்திலும்
செந்தமிழ் உணர்வே நிறையட்டும் - இந்த
செகம் முழுதும் தமிழ் மொழியால்
செழிப்புற்றே இனிமை நிறையட்டும்....!!

தமிழ் வாழ்க எனச் சொல்லி
தன்மையாய் தொடங்குங்கள் உங்கள் கை பேசி
தமிழ் வெல்க எனச் சொல்லி
தமிழனாய் முடியுங்கள் உங்கள் தொலை பேசி....

எங்கெங்கு எப்படி எப்படி முடியுமோ
அங்கங்கு அப்படி அப்படி தமிழ் பரப்புங்கள்......
அழகு பிரபஞ்சத்தில் நிறைய வேண்டும்
அதற்கு தமிழ் ஒன்றே வழி என்று உணரவேண்டும்

வாழ்க தமிழ் - வளர்க இவ்வையகம்

அனைத்து எழுத்து தோழமை நெஞ்சங்களுக்கும்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (1-Jan-15, 8:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 124

மேலே