அக்கரை போவதற்கு
கரை சேர்வதற்கு
ஒருவன்..
நீந்தி கடக்க விரும்புகிறான் ..
பரிசலில் கடக்கிறான் .. இன்னொருவன்
பாலத்தின் மீது பயணம் செய்து
கடக்கின்றான்..மற்றொருவன்..
கடப்பதுதானே முக்கியம்..
விதம் அல்ல..
எந்த ஒன்று மட்டுமே
மற்றதை விட தாழ்ந்ததல்ல..
கரையை ..
கடப்பதுதானே முக்கியம்..
இதில் உன் வழியா ..
என் வழியா..
சிறந்தது என்ற
வாதமும் தேவையே இல்லை!
வழியின் சிறப்பு பேசுபவர்களை பார்த்து
அவர்களின்
அக்கறை பார்த்து..
சிரிக்கிறது..
..
அக்கரை!