மனதின் உள்ளே

கதவை உடைத்து
உள்ளே வந்த திருடன்..
எதுவும் திருடாமல்
வெளியேறினான்..
வீட்டினுள் ..
யாரும் இல்லை..
எதுவும் இல்லை..
ஆசைகள் இல்லை..
பாவங்கள் இல்லை ..
பாரங்கள் இல்லை..
அமைதி மட்டும் இருந்தது..
அதை அவனால்
எடுத்துப் போக முடியவில்லை! ..

எழுதியவர் : கருணா (2-Jan-15, 5:08 pm)
பார்வை : 249

மேலே