கொஞ்சம் கொஞ்சமாய் நிறைய கேள்விகள் - 2- மகிழினி

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்த நாடு ....... சந்தேகம் என்பதே இல்லாமல் உண்மைதான் ....... மாநிலத்தார் அனைவரும் ஒன்றே .......... வறியவனுக்கும் சிறியவனுக்கும் பெரியவனுக்கும் இந்தியன் என்று ஒரே பெயர் தான் ஆனாலும் கல்வி கற்கையில் எல்லாம் மாற்றம் காணுகிறது ....... கல்வி என்பது அறிவு சார்ந்த விடயமாக கருதாமல் அனைத்தையும் தனியார் மயம் சமர்பித்துவிட்டு லாப கணக்குகள் மட்டும் காண்கிறது கஜானா வட்டம் ..........
வேட்டி சட்டை சேலை மிக்சி கிரைண்டர் சைக்கிள் தொலைக்காட்சி என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் இலவசமாக தந்துவிட்டு கல்வியை லாபம் நிறைந்த தொழிலாக பார்ப்பது ஆரோக்கியமான விடயமா ?
பள்ளி வாழ்க்கை முடித்துவிட்டு கல்லூரி என்று சேர்கையில் திக்கி திணறுகிறது பொதுப்படையான கல்வி ...... ஒரு application form கூட fill பண்ண மற்றவர்கள் உதவியை நாடும் மாணவர்கள் தான் அதிகம் ......... மாநிலக் கல்வி ஒன்று மத்தியக்கல்வி ஒன்று ஆங்கிலோ இந்தியன் வழி பாடங்கள் தனியார்மயமாக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி ஒரு பக்கம் என ஒவ்வொருவரும் ஒரு பக்கம் பிய்த்துக் கொள்கின்றனர்..... corporation பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நிலை என்னவோ கேள்விக்குறிதான் ?
நவீன அடிமைகள் நிறைந்த நாடுகளின் பட்டியல் ஒன்று தற்போது ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது!
இந்த பட்டியலில் இந்தியாதான் முதலிடம் ....... ஆச்சரியத்தில் நிற்க ஒன்றும் இல்லை ........
நாடு வளர்ந்துள்ளது ... எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் ....... இருந்தும் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதின் காரணம் தான் என்ன ?
என் தோழி ஒருத்தி காந்திபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ..... பள்ளி தாளாளரின் வேண்டுகோள் என்னவென்றால் "நீங்கள் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் தான் நடத்த வேண்டும் . வேறு விடயங்கள் மாணவர்கள் கற்க வேண்டாம் ..... அவர்களின் மதிப்பெண் உயரும் வகையில் மட்டுமே நீங்களை அவர்களை தயார் படுத்த வேண்டும் " என்றே கூறியுள்ளார்.......
மாணவர்கள் என்றால் வெறும் புத்தக வாசிகளாக இருக்கவேண்டும் என்றால் அவர்கள் வாழ்க்கையை கற்பது எங்கனம் ?
ஒரு கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதின் தெளிவு யாரிடமும் கிடையாத பட்சத்தில் மாணவர்களை குழந்தைகளை நேர்வழிபடுத்தும் பொறுப்பை யார் தான் ஏற்பது ........ ?
பள்ளி மாணவனால் ஆசிரியர் குத்திக் கொலை ...... 10 ஆம் வகுப்பு மாணவன் ஆறாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றான் .... பள்ளி மாணவர்களிடையே பகை காரணமாக சக மாணவன் வெட்டிகொலை ....... பள்ளியில் சாதிக் கலவரம் ஏற்பட்டதால் பள்ளிக் கண்ணாடிகள் உடைப்பு .... வகுப்பில் இருக்ககைகள் அடித்து நொறுக்கப்பட்டன....... செய்திகள் எல்லாம் trp ரேட் உடன் இதய துடிப்பையும் ஏற்றுகிறது .........
ஒழுக்கம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மாணவர்களுக்கு கற்பிக்காத கல்வியும் ஒரு கல்வி தானா ?
மீண்டும் பேசுவோம் .......
நன்றிகளுடன்
மகிழினி !