ஊனம்

ஊனமுற்றது என் தவறும் இல்லை
என்னை ஈன்றவள் தவறும் இல்லை
என்னைக் கேட்டு ஈன்றடுக்கவும் இல்லை என் தாய்
இல்லை அவளைக்கேட்டு அவள் மடியில் நான் பிறக்கவும் இல்லை

ஊனமுற்ற பல நெஞ்சங்கள் உலா வருவதுண்டு இவ்வுலகில்
இதை மறந்து ஊனமுற்ற மனிதர்களை ஏன் உன் கண்கள் தேடுகிறது

ஊனம் என்பது உடல் உறுப்புக்களில் வர்ணிப்பது அல்ல
அது இயலாமையை வர்ணிப்பது
உன் இயலாமையை ஒளிக்க உன் இதயத்தை தூய்மை படுத்து
பின் ஊனம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை .

எழுதியவர் : ரிஷாட் (4-Jan-15, 1:08 pm)
சேர்த்தது : ரிஷாட்
Tanglish : oonam
பார்வை : 559

மேலே