மண மடல்
இருமனம் இணையும் திருமணம் !
இனியென்றும் வீசட்டும் நறுமணம் !
இருவரின் உழைப்பு தொடும்வானம் !
இரடிப்பு ஆகட்டும் பெரும்வருமானம் !
நெருக்கடி அடிக்கடி இடித்தாலும்;
எடுக்காதிர் தனித்தனி ஜமக்காளம் !
இறைப்பணி ஆற்றட்டும் தொண்டுள்ளம்
இறைவன் எப்போதுமே பக்கப்பலம் !
போராடும் குணத்தைப் பெற வேண்டும்
போராட்டம் என்பதை விட வேண்டும்
நீரோடும் நெருப்போடும் நீங்க வேண்டும்
நீரோட்டம் தெரிந்து நீந்த வேண்டும் !
பாராட்டும் பட்டயமும் குவிக்க வேண்டும்
பார்’போற்றும் புத்திரராய் சிறக்க வேண்டும்
ஈரெட்டுப் பேறுகள் ஈண்ட வேண்டும்
ஈகை தருமங்களை தூண்ட வேண்டும் !
தாலாட்டும் தொட்டில்கள் கட்ட வேண்டும் – அதில்
தவழ்ந்தாட இரு குட்டிகள் பெக்க வேண்டும் !
சொல்லாட்சி நாவன்மை ஊட்ட வேண்டும் – அவர்கள்
கோலோட்சும் சூட்சமத்தை நாட்ட வேண்டும் !
மனைமாட்சி மாண்புகளை மதிக்க வேண்டும்
மயிர்கூச்செரியும் அன்புதனை விதைக்க வேண்டும் !
உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் – ஊரை
நல்லாட்சி செய்து உசத்த வேண்டும் !
தானத்தின் தலைவன் ‘குமாரின்’- குமாரன்
தருமத்தின் தலைவன் ‘தனபாலின்’- குமாரி
இருவரும் இணைந்து பெருவாரி பலன்கள்
பெறுவதில் முனைந்து பெறட்டும் நலன்கள் !
ஆயக் கலைகள் அறுபதும் கற்று
ஆயா தாத்தா பட்டத்தைப் பெற்று
ஆண்டுகள் நூறு நீடூழி வாழ – என்
வேண்டுதல் என்றும் தூண்டு கோலாகும் .
குறிப்பு :
( என் இனிய கவி சகாக்களே !
உற்ற நண்பரொருவரின் மகன் திருமணத்திற்காக
மேற் கண்டவற்றை வாழ்த்து மடலாக அளிக்க உள்ளேன்,
ஆகையால் நிறை குறைகளை திறனாய்ந்து
விமர்சன கணைகளை வீசுமாறு
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் !
இன்னும் ஓரிரு நாட்களில்
கண்ணாடி சட்டத்தில் என் கவிதை இடம் பெற
உங்கள் பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி
ஆயிரம் பேர் கூடும் சபைதன்னில்
எனக்கோர் அங்கீகாரம் கிடைக்க வேண்டுகிறேன். )
என்றும் கவி பணியில்
இரா. மணிமாறன்
984132215
ஒருவர் அனைவருக்காகவும்
அனைவர் ஒருவருக்காகவும் பிரார்த்திப்போம் !
( வேறு )
வாழ்வில் - இருமனம் இணையும் திருமணம் !
வீட்டில் - இனியென்றும் வீசட்டும் நறுமணம் !
உலகில் - இருவரின் உழைப்பு தொடும்வானம் !
கணக்கில் - இரடிப்பு ஆகட்டும் பெரும்வருமானம் !
இருள்சூழும் நெருக்கடி அடிக்கடி இடித்தாலும்;
இறுதிவரை எடுக்காதிர் தனித்தனி ஜமக்காளம் !
இறைப்பணி ஆற்றட்டும் தங்களின் தொண்டுள்ளம்
இறைவன் என்றென்றுமே உங்களின் பக்கப்பலம் !
போராடும் குணத்தைப் பெற வேண்டும்
போராட்டம் என்பதை கைவிட வேண்டும்
நீரோடும் நெருப்போடும் நீங்க வேண்டும்
நீரோட்டம் தெரிந்து நீந்த வேண்டும் !
பாராட்டும் பட்டயமும் குவிக்க வேண்டும்
பார்’போற்றும் புத்திரராய் சிறக்க வேண்டும்
ஈரெட்டுப் பேறுகள் ஈண்ட வேண்டும்
ஈகை தருமங்களை தூண்ட வேண்டும் !
தாலாட்டும் தொட்டில்கள் கட்ட வேண்டும் – அதில்
தவழ்ந்தாட இரு குட்டிகள் பெக்க வேண்டும் !
சொல்லாட்சி நாவன்மை ஊட்ட வேண்டும் – அவர்கள்
கோலோட்சும் சூட்சமத்தை நிலைநாட்ட வேண்டும் !
மனைமாட்சி மாண்புகளை மதிக்க வேண்டும்
மயிர்கூச்செரியும் அன்புதனை விதைக்க வேண்டும் !
உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் – ஊரை
நல்லாட்சி செய்து உசத்த வேண்டும் !
தானத்தின் தலைவன் ‘குமாரின்’- குமாரன்
தருமத்தின் தலைவன் ‘தனபாலின்’- குமாரி
இருவரும் இணைந்து பெருவாரி பலன்கள்
பெறுவதில் முனைந்து பெறட்டும் நலன்கள் !
ஆயக் கலைகள் அறுபதும் கற்று
ஆயா தாத்தா பட்டத்தைப் பெற்று
ஆண்டுகள் நூறு நீடூழி வாழ – என்
வேண்டுதல் என்றும் தூண்டு கோலோகும் .