சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

மதம் ஏறிய மனிதா! மறந்துவிடு!
மதத்தை விட்டிறங்கி யதை துறந்துவிடு!
மதத்தின் பிள்ளை சாதிகள் பலவுண்டு!
மதப்பித்து மானுடங்கள் சொல்வதுண்டு!

கல்விச்சாலைப் பதிவேட்டில் சுயவிவரம் நிரப்ப,
மதம்என்ன வெனக்கேட்டால்? – மனிதமென்று சொல்.
மதம்இன மில்லா விண்ணப்பங் கேள்.
மதிக்கவில்லையேல் மதம்கூட்டி கொல்.

சாதிசொல்லி சலுகை கேட்டால் சாடு!
சாதிக்கு சான்று வேண்டுமா நமக்கு?
சாதிக்க புதுப்பிறப் பெடு – சாதிவெறி
சலவர்கள் குறுக்கிட்டால் பிரம்பெடு!

நீ இந்துவா? இருக்கட்டுமே! – இனிமேல்,
இசுலாமியர்கள் மாமன்கள். உரிமையுண்டு பெண்கேள்.
கிறித்துவர்கள் அத்தையர்கள். பரிசம் போடு.
இருசேர விருந்துக்கழைத் துறவாடு!

இனி யாதெங்கும் காண வேண்டும்
இன மதமில்லா சமத்துவ சமுதாயம்.
மதம் அழித்தால், இனம் தானேஒழியும்!
சாதிக்க முயற்சிப்போமே? முடியாததல்ல.!!!

-------------------------------------------------------------------------------------------------------------
பெயர் : கண்ணன்.க
வயது : 25
வதிவிடம் : 106, தேனீஸ்வரன்பாளையம்
ஊத்துக்குளி அஞ்சல்
திருப்பூர்
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : 97502 86659
--------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : கவிக்கண்ணன் (5-Jan-15, 4:47 pm)
பார்வை : 134

மேலே