சாதி ஒழி மதம் அழி சாதி- பொங்கல் கவிதை போட்டி 2015

விண்டதொரு உலகில் தண்டது நிமிர்த்தி
கண்டது இங்கு உயரிய சிறப்பு
கொண்டதன் பெயரோ மானிட பிறப்பு

நாலும் தெரிந்திட ஆறதை பெற்று
நால்திசை சென்று பாரதை கற்று
சொல் முதல் வில் வரை
நாளும் வளர்த்து உலகை
காலடி வீழ்த்திய இனத்தோன்

தொழில்வழி வகுத்த பிரிவினை இன்று
தொடர்வழி வருகையில் சாதியாய் நின்று
இடர்தனை கொடுக்குது உயிர்தனை கொன்று
நடந்திடும் போர்களோ முடிவது என்று......?

இறையது வழிபடும் முறைதனை தேடி
மனமதை ஒருநிலை படுத்திட நாடி
மதமதை தொடர்ந்திட்ட மானுடம் கோடி
மனிதத்தை இழந்திட்ட சோகமே மீதி

பிரிவினை வளர்த்திடும் சாதிகள் வேண்டாம் தன்
பிறப்பை மறந்திட்ட மதங்களும் வேண்டாம்
பிரியமும் நேசமும் வளர்ந்திட வேண்டும்
பிரிவுகளற்றதொரு தேசம் மலர்ந்திட வேண்டும்

நாளைய பாரதம் நன்மைகள் பார்த்திட
நால்திசை உலகும் நம்மவர் போற்றிட
சாதிகள் இழந்து சாதனை செய்வோம்
மதங்களை இழந்து மனிதத்தை செய்வோம்


படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.

பெயர்: கி.கவியரசன்
வயது: 26
வசிப்பிடம்: 203 ஜீவானந்தம் தெரு, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்-606701, தமிழ்நாடு.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: +917639563889, 9087278738

எழுதியவர் : கவியரசன் (5-Jan-15, 9:27 pm)
பார்வை : 104

மேலே