சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!

பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...

உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!

தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!

பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......

பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பதற்க்கு
எவருக்கென்ன பந்தம்?..
பகுத்தறிவு சொல்லி போதிக்க வாடா!..
சாதி ஒழி! மதம் அழி! சாதிக்க வாடா!..



படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.

பெயர்: த.தினகரன்
வயது: 25
வதிவிடம்: 9 D, MIG -9, பழைய ASTC ஹட்கோ, ஓசூர்-635109, தமிழ்நாடு.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: +919677704415, +918608007635

எழுதியவர் : தீனா (5-Jan-15, 8:48 pm)
பார்வை : 131

மேலே