வாழ்ந்து காண்பிப்பேன்

உன்னை வாழ்த்துவதா?
இல்லை வருந்துவதா?
தெரியவில்லை எனக்கு.

காதலிக்கிறேன் என்று
கடிதம் ஒன்று கொடுத்தாய்
கடிதத்தில் நீ.

காதலிப்பது உன்னை
கட்டிக்க போவது அவனை
என்று எழுதி உள்ளாய் நீ..

காதல் என்பது உனக்கு
கண்ணா பூச்சி விளையாட்டா?
ஓடி பிடித்து விளையாட.

உன்னோடு நான் இல்லை
ஒதுங்கி விட்டேன் உன்னை விட்டு
மறந்து விடு என்னை நீ.

வாழ்த்தவும் மாட்டேன்
வருந்தவும் மாட்டேன்
வாழ்ந்து காண்பிக்கிறேன்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (6-Jan-15, 11:35 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 340

மேலே