மது

ஏழ்மை
இயலாமை
விலைவாசி இறங்காமை
போன்றவற்றால்
வாழமுடியாமை

ஒரு ஆமை
உள்ளே நுழைந்தாலே
விலங்காதென்பார்கள்
இத்தனை ஆமைகளும்
வீட்டுக்குள் வந்தால்
உருப்புடுமா?

தாலி கட்டிய மாது
வீட்டிலிருந்து
காத்து நிற்கையில்
காலில்லா மாது
கவலை போக்கி
நிம்மதி தருமென்றால்
நம்பலாமா?

ஆசை காட்டி
மோசம் செய்யும்
சீட்டு கம்பெனிகள்
சுருட்டுவதுபோல்
கவலையும், களைப்பையும்
கலைவதாய் சொல்லி
அடிமையாக்கி—உயிரை
எடுத்து கொள்ளும்

உயிரை அழிக்கும் மது
இளமையில் உறவாடி
இரத்தத்தில் கலந்து
முதுமையில்
மூளையையும்
நரம்பையும்
சீர்குலைத்து
மனிதனையே
முடிவில் குடித்து விடும்.

எழுதியவர் : கோ.கணபதி (6-Jan-15, 11:50 am)
Tanglish : mathu
பார்வை : 66

மேலே