சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”
சாதி மதம் பற்றி எனக்குக் கற்று தந்தது பள்ளிக்கூட முதல் நாள் ....
சேர்க்கைப் படிவத்தின் மூன்றாம் வரி கேள்வியே
மதம்.... நான்காமவன் சாதி....
அர்த்தம் புரியா வயது அது....அப்படியே இருந்திருக்கலாம்...
உனக்கு எந்த பிரிவில் மதம் பிடித்துள்ளது....?
சாதீ-நீ சார்ந்திருக்கும் தீயது எது...? என்பதாய் தோன்றுகிறது சேர்க்கைப் படிவ கேள்விகள்...
வகுப்பறைப் புத்தகத்தில்
வசனம் ஒன்றை வாசிக்கக் கேட்டேன்...
"""" சாதிகள் இல்லையடி பாப்பா""""
வகுப்பறை புத்தகமோ
வரையறுக்கப் பட்ட சாதிக்கு மட்டுமே
வழங்கப்பட்டிருந்தது இலவசமாக.....
அன்று நான் கற்றேனா... சாதிகள் இல்லை என்று..???
செருப்புத் தைக்கும் என் அப்பா உயர் மதத்தவராம்...
வங்கி மேலாளரான என் நண்பனின் அப்பா கீழ் மதத்தவராம்...
கல்வி உதவித் தொகை மறுக்கப்பட காரணம் கூறியது என் பள்ளிக்கூடம்...
ஏட்டில் மட்டுமே ஏமாப்புடன் எழுதப்பட்டுள்ளது
சாதி ஒழி! மதம் அழி! சாதி
அணுவைப் பிளந்த அறிவியலும் ஆதாமின் சாதியைத் தேடுகிறது...
சாதி என்ற வார்த்தை வரும் புத்தகத்தை எரித்திடுவோம் ....
மதம் என்பதனை இந்தியன் என திருத்திடுவோம்....
சாதிமதம் அழியும் வரை நாடெல்லாம் போராடுவோம்...
நிச்சயமாய் இரு சாதி காண்பேனே
அதில் ஓன்று பெண்தானே...