இப்படி நாம் காதலிப்போம்-பொங்கல் கவிதைப் போட்டி 2015ரகு
இலையுதிருங் காட்டுக்குள்
இனிமையாக விளையாடிய அணில்கள்
கிளைமறைவில் காதல்பருகின
இப்படி நாம் காதலிப்போம்
சிட்டொன்று சட்டென்றமர்ந்தது
இன்னொருசிட்டில்
பிறசிட்டுகள் வேடிக்கைபார்க்க
கூட்டில்வைத்துக் கொள்வோமென
கூடிப்பறந்தன
இப்படி நாம் காதலிப்போம்
வெண்நாரையும் செந்நாரையும்
வானில் வட்டமிட்டு
நிறபேதமின்றி நீள்காதல் புரிந்தன
இப்படி நாம் காதலிப்போம்
பசுவின்மடியில் பால்பருகும் கன்றை
நாவால்நக்கி காதலாய் நனைத்தது காளை
இப்படி நாம் காதலிப்போம்
வாழ்நாளில் தன்இணை தவிர
பிரிதொன்றைத் தேடாதாம் புறாக்கள்
இப்படி நாம் காதலிப்போம்
இயற்கையின் காதல் பாடங்கள்
இன்னொருநாளில் கற்போம் -வா அன்பே
மனிதக் காதலையும் மகத்துவமாக்குவோம் !
----------------------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்:அ.ரகு சுஜய் டிஜிடல்ஸ்
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304