சாதி ஒழி மதம் அழி சாதி
சாதிக்கப் பிறந்தவன் சாதிக் கொடி தூக்க மாட்டான்
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் --எந்த
சாதிக்கும் பிறந்தவர்கள் அல்ல
மனிதன் தான், மூட்டை தூக்கும் தொழிலாளியும்
மனிதன் தான், பண மூட்டைகளின் முதலாளியும்
பிறகென்ன வேறுபாடு
பிரிவு ஒன்று தானே அவர்களின் வேலைப்பாடு!
ஏழைகள் எல்லாம் கோழைகள் அல்ல
படிப்பறிவு இல்லாததால் ...........
எழுந்து விட்டால் எவரும் எரிமலைதான்
துணிவுள்ள வரை................
ஆதி மனிதம் --பல
சாதி மனிதம் ஆனதே --என்று
சாதி மனிதம் ஆதி மனிதம் ஆகுமோ !
மதங்களை ஒழிக்க மனிதனால் முடியும்
மதங்களை உண்டாக்கியவனே மனிதன் தானே!
மண்ணில் பிறக்கும் போது
மதத்தோடு பிறப்பவனல்ல மனிதன்
மனித இனமாக பிறப்பவன்
பல குணமாக சிறப்பவன்
"எப்படியோ ஒட்டிக்கொள்கிறது
இந்த மதமும் சாதியும் "
"சாதி நீக்கி மதம் மறுத்து
மகிழ்ந்து பார்--அந்த
சூரியனும் உனக்கு நிழல் தரும்
தன்னிலை நீங்கி !"
மனிதன் உண்டாக்கிய ஒரு பொருள்
அதன் நிலை தவறும் போது
அவனுக்கு எப்படி கோபம் வருகிறதோ
அப்படித்தான் இறைவனுக்கும்
அவன் மனிதம் ஒன்றைத் தானே சாதியாகப் படைத்தான்
மனிதர்களோ பிரிந்த்துவிட்டனரே பல சாதியாக !
ஒரு அடர்ந்த காட்டுக்குள் பார்க்கும் இடமெல்லாம்
வழியாகத்தான் தெரியும்
அதிலே நமக்கென்று ஒரு வழியை ஏற்ப்படுத்தி
எல்லோரும் அதிலேயே சென்று வருவதில்லையா மனித சாதியாக
..........இல்லை
ஆளுக்கொரு மேட்டுப் பள்ளத்திலா செல்கிறோமா
பல மிருக சாதியாக ...............
தேவை இல்லை சாதி நமக்கு
அதனை முடிந்தவரை நீ முடக்கு
மதவாசம் நீக்கி
மண் வாசம் மட்டும் சுவாசி
அன்று சாதிப்பாய் நீ
சந்திக்கும் சவாலெல்லாம்!
வீதிக்கொரு சாதி வாசம் தவிர்
மனிதம் ஒன்றே சாதி என்று சாதி !