காணவில்லை
அயலூருக்கு
பிழைக்க சென்ற
பெருமாள்சாமி
சொந்த கிராமத்திற்கு
திரும்பி வந்து பார்த்தால்..
ஊரிலிருந்த குளத்தையும்..
எல்லையிலிருந்த..
ஏரியையும்..
சிறிய குன்றையும் கூட
காணவில்லை ..
மறைந்த முன்னாள்
கிராமத்தின்
அடையாளமாக ..
ஏமாளிகளாய்..
ஊர்மக்கள் ..!
வங்கிக் கணக்கு
தொடங்கிய சந்தோஷத்தில்!