காக்க காக்க
இன்னும் கொஞ்ச நேரத்தில்
..நீ பிறக்கப் போகிறாய் ..!.
வயிற்றிலிருந்த சிசுவிடம்
ஒரு குரல் ..கூறியது!
பிறப்பதால்
எனக்கு என்ன
பயன் கிடைக்கும்..?..
சிசு கேட்டது..!
கிடைத்த பதில்..
உனக்கு..
ஒரு பெயர் கிடைக்கும்..
உடனே..
ஒரு..மதம் ..
ஒரு சாதி..
ஒரு மொழி..
ஒரு வாரிசு என்கிற அந்தஸ்து..
இவையெல்லாம் உடனே கிடைக்கும்..!
அப்புறம் ..
உனக்கு கொண்டாட்டம் தான்..
..
இன்னும்..இன்னும்..
நீ ஆசை பட பட
நிறையவே கிடைக்கும்..
கொடுக்கும் இவ்வுலகம்..
..
அப்படியென்றால் ..
எது கிடைக்காது..
என்றது சிசு..
இப்போதிருக்கும் மனது
மட்டும் ..
என்று வந்தது
பதில்!
..
குலம் காக்க..
இனம் காக்க ..
மொழி காக்க..
...
வெளியில் ஒரே சப்தம்..
உள்ளே..
பிறந்த குழந்தையின்
அழுகை சப்தம்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
