சுதந்திரமாக

சுதந்திரமாக

சுவர்..
கொஞ்ச நாட்களுக்கு முன் வரை ..
சுத்தமாகத்தான்
இருந்தது..
அசுத்தம் செய்யாதீர்கள்..
என்று எழுதியதற்கு
மறு நாள்..
நாலு பேர் நின்று
அசுத்தம் செய்து போனபின்..
அந்த இடம் அதற்குத்தான்
என்று ஆகிவிட்டது..
இயற்கை காட்சிகளும்
கடவுளர் படங்களும்
வரைந்த பின்
இன்னும் அதிகமாகிப் போனது..
அசுத்தம்..
இது அவர்களின்
உரிமை பிரச்னை அல்லவா?

எழுதியவர் : கருணா (8-Jan-15, 3:19 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : suthanthiramaaka
பார்வை : 721

சிறந்த கவிதைகள்

மேலே