சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

கண்டதில்லை கடவுளை நான்!
கண்டிருந்தால் கேட்டிருப்பேன்!
சாதியை ஒழி என்று!
சாந்தமற்ற விழிகொண்டு!

விலைமாதர் விடுதியிலே!
விரும்பவில்லை சாதியினை!
வீடு வந்து சேர்ந்தவுடன்.!
சாதியும் வந்து சேர்ந்திடுதோ.??

மனங்களில் தொடங்கும் காதல்!
மதங்களின் மத்தியிலே!
மரணத்தில் வீழ்கிறதே!
பிணங்கள் கூட கிட்டுவதில்லை..!

பச்சிளம் குழந்தை சாக..
கலப்படம் பாலில் வேண்டாம்.!
சாதிகள் வீதியில் சாக!
கலப்படம் செய்தால் போதும்!

சாதி சொல்லி கேட்டதுண்டா.?
சாக போவோருக்கு இரத்தம் தேவையென்று.?
சாம்பலாகும் உடல்களுகெல்லாம்...
ஊர்வலமாம் சாதியிலே!

விதியை சொல்லி வருந்துவதோ.?
மதியை வென்று திருந்துவதோ.?
சாதிக்கும் சாவு வரும்.!
சாதிக்கும் நாள் வரையில்(வரும்போது)!


இது என் கற்பனை சுய படைப்பு
பெயர் -சக்தி
வயது - 23
வசிப்பிடம்- சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+91 8124 775414

எழுதியவர் : சக்தி (8-Jan-15, 2:29 pm)
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே