மனிதத்தை தின்ற இவனை மன்னிப்பதா சொல்லுங்கள்
ஆட்சி கட்டிலின் சுகம் தேடி
ஆட்டம் போட்டான் அழிவை நாடி
காட்டிக்கொடுக்கும் நரிகளையும்
கூட்டு சேர்த்தான் பொய் புகழ்பாடி .
சிதைத்து அழித்தான் தமிழென
அடக்கி புதைத்தான் தமிழனை
ஆட்டம் கண்டது என் இனம்
அடிமை பட்டது இன வெறியனிடம் .!!
சிறுபான்மை இனம் என்றான்
அவனை சிரம் தாழ்த்தி வணங்கு என்றான்
முதுகெலும்பில்லா அவன் இனத்திற்கு
முந்தானை விரி என்றான் ..!!
தலை குனியும் தமிழன் நிலை கண்டு
தட்டிக்கேட்டன சில வெளிநாடுகள் அன்று
தந்திரம் படித்த நரி அவனே தலையை
தடவி அனுப்பி வைத்தான் ...!!
பொறுத்து பார்த்த சிறுபான்மை
சீறி பாய்ந்தது சிறப்போடு
நீதியின் வழிதனை தேர்ந்தெடுத்து
முடக்கி போட்டது அவன் ஆட்டத்தினை ...!!
மனிதத்தை தின்ற இவனை
மன்னித்து விடுவது முறையோ
தண்டிக்க வேண்டும் இவனை
தமிழ்நாடே (தமிழன் நாடே )நீ
சிந்திக்க வேண்டும் இதனை ..!!!