இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

நீலப் பட்டுடுத்தி
வான் வனிதையவள்
ஒயில் நடம் ஆட
மேகக் கூந்தலும்
காற்றில் அலை பாய
சூடிய நட்சத்திர
மலரெலாம்
மின்னி மெருகூட்ட
எழில் வதனன்
சந்திரக் காதலனின்
ஒளி ஸ்பரிசம்
மேலே பட்டதும்
மேகக் கூந்தலும்
காதலனவனுக்கு
இரத்தினக் கம்பளமாகிட
ஆங்கே அரங்கேறும்
காதல் காட்சி - நம்
உள்ளந்தனிலும்
முகிழச் செய்யுமே -
இப்படி நாமும்
காதலித்துப் பார்ப்போமே !
உலகை மறந்து - இன்ப வானில்
சிறகடித்துப் பறப்போமே என்ற
தீராத ஆசை தனையே !

எழுதியவர் : பி.தமிழ் முகில் (10-Jan-15, 4:10 am)
பார்வை : 90

மேலே