நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015
சங்கம் தொட்டு சரித்திரம் கொண்ட
இன்னுயிர் தமிழின் தொண்மையை
குமரிக்கண்டம் முதல் குறு நிலப்பரப்பிலும் கூட
அரியணை ஏறி ஆட்சி செய்த
சுவடுகள் கூட சான்று பகர்ந்து விடுமே!
திணிப்பினால் தகர்க்க நினைத்த நொடியில்
திரண்டெழுந்த தியாக அலைகள்
மொழிப்போருக்காக தம்மை திரித்து
தம் இன்னுயிரையும் துச்சமாய் எண்ணியதை
கரை புரண்டோடிய வரலாற்றின் கருப்புப்பக்கங்களும் கூட
பறை சாற்றி விடுமே!
கிரந்த எழுத்துக்களும் புலம்பெயர்வுகளும்
இருள் கிற்றுக்களாய் எம்மிடை கசிந்து
வசைப்பாட்டை அவதரித்த எமக்கே
வசைப்பாடிக்கொண்டிருக்கின்ற நிகழ் காலத்திலும் கூட
தமிழா உனக்கு உன் மொழி நிலை தெளியவில்லையா?
விரையும் அந்நியக்கனைகளை எதிர்க்க
தூசு தட்டப்படாத தமிழின் பக்கங்கள்
புரட்டப்பட வேண்டிய காலச்சதியில்
இன்றைய தமிழ் தலைமுறைகள் நாம்
முடிவிலிப்பயணத்தில் எதிர்கால நிழழ்களாய்.................
*********************************************