நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதைப் போட்டி 2015

வேடிக்கையான தமிழர்கள் ;வேதனையான சமுதாயம்.
பொன்மொழிகள் ஏந்திய மேற்சட்டை பாவம்.
இருபத்திரண்டு வயதுப் பெண்
அவளது மேற்சட்டையில் ஒரு பண்
“ப்ளீஸ் லவ் மீ” “ப்ளீஸ் கிஸ் மீ”
எவ்வளவு அநாகரிகம், எவ்வளவு அசிங்கம்? (6)
அப்படியிருக்கையில் சென்னை நகரில்
இன்று ஓர் பயணம் .’ஷேர் ஆடோவில்’
உண்மை நிகழ்வு;கற்பனை இல்லை!
ஓர் இளைஞனின் மேற்சட்டையில்
”என்ன தவம்
நான் செய்தேனோ (12)
தமிழனாகப் பிறப்பதற்கே”
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
மகிழ்ந்தேன், மனம் நிறைந்தேன்.
கேட்டேன் அவனிடம்:
:”நண்பனே! திருக்குறள் எத்தனை அறிவாய் நீ?”
கேட்டது எனது தவறென முழித்தான்! (18)
மீண்டும் கேட்டேன் அவனிடம்:
”நண்பனே? பாரதியின் பாடல் எத்தனை அறிவாய் நீ?”
முழித்தான்; என்னைவிட்டு அகன்றான்.
விழித்தேன், அவன் நெஞ்சை அரித்தான்.
”நாளைய தமிழும் தமிழரும்”
யான் அறியவில்லை; நீங்கள்? (24)

எழுதியவர் : என் வி சுப்பராமன், சென்னை (10-Jan-15, 1:56 pm)
பார்வை : 104

மேலே