தமிழ் தாய்
உன் பிறப்பு பொதிகை
பூர்வீகமோ தமிழகம்
உன் உதடு திருக்குறள்
உள்ளமோ திருவாசகம்
உன் விரல்கள் பதிற்றுபத்து
பற்களோ முத்தொள்ளாயிரம்
உன் இடை குறுந்தொகை
எடையோ ஐந்திணை ஐம்பது
உன் பக்தி தேவாரம்
புத்தியோ நெடுந்தொகை
உன் குணம் திருபுகழ்
மனமோ பாஞ்சலி சபதம்
உன் அமைதி அகல் விளக்கு
அரவணைப்போ குடும்ப விளக்கு
அணிகலன்களாய்
தலையில் சீவக சிந்தாமணி
இடையில் மணிமேகலை
காதில் குண்டலகேசி
கையில் வளையாபதி
காலில் சிலப்பதிகராம்
பைந்தமிழே செந்தமிழே தேன்தமிழே தமிழ் தாயே
எங்களின் பேச்சும் மூச்சும் உயிரும் நீதான்.