பொங்கல் கவிதை போட்டி 2015 நாளைய தமிழும் தமிழரும்
இருட்டில் இருப்பதென்ன - பிறர்
இகழ்வில் சாதலென்ன - சங்க
தமிழர் வாழ்வு இன்னும்
வளமை இழந்த தென்ன ?
இருக்கை இழந்ததும் -கெடுமொழி
மொழியும் பழக்கமென்ன
உன் வியர்வைத்துளிகளை- வேற்று
மண்ணில் அடகு வைத்ததென்ன ?
உன் தாய்மண் இங்கே
(விவ)சாயம் போனதென்ன
வேற்றுமொழி கலந்திட்ட -உன்
தமிழிங்கே வாழ்ந்திடுமா ?
உன் பிள்ளைகளும் இங்கு
தாய்மொழியும் மறந்திடுமே-உழுதிடு
தமிழா உன் நிலத்தில்
தமிழையும் தழையையும் ஒன்றுசேர . !