நீயும் நானும்

நான் நல்லவன் கெட்டவன்
என்பது என்னை பிறர்
நோக்கி அறிவது.
நான் ரசிக்கும் மழை
பொழியும்போது மகிழ்ச்சியும்
பொழியாவிடின் ஏமாற்றமும்
ஏற்படுவது இயல்பே !
ஆனால் ஒருபோதும்
நான் மழையை
வெறுத்தது இல்லை.
நான் ரசிக்கும் பனி
சில காலங்களில் பேய்ந்தும்
சில நொடிகளில் மறைந்தும்
தான் போகின்றது !
ஆனால் ஒருபோதும்
என்னுள் ஏற்ப்படும்
சிலிர்ப்புகள் அடங்கியது இல்லை.
நான் ரசிக்கும் மலர்
பூத்து குழுங்கவும்
வாடி வதங்கவும் தான்
செய்கின்றது !
ஆனால் வாடும்போது நாளை
வருவாய் என்ற நம்பிக்கை
ஒருபோதும் அகன்றதில்லை.
நான் ரசிக்கும் பசுமைக் கூட
சில மாதங்களில்
மங்கியும் உதிரவும்
செய்கின்றது !
ஆனால் மீண்டும் உதிர்த்தெழும்
போது ஏற்ப்படும் உணர்ச்சி
அளவற்ற இன்பமே.
நான் உன்னை மழையாய்,
பனியாய்,மலராய்,
பசுமையாய் நேசிக்கின்றேன் !
நீ என்னை "நான்'யாய்"
இருப்பதால் நேசிக்கின்றாய் !
எப்பொழுதும் ஏற்ப்படும் ஐயம்
நான் நானாய் இல்லையெனும்போது என்ன
நடக்கும் என்பதே ?