தாமிரபரணி

தாமிரபரணி:

பொதிகை மலையில் உதித்து..!
குற்றாலத்தில் அருவியாக விழுந்து..!
தென்னகத்தின் பரணி எங்கும் பாய்ந்து..!
காயலில் வந்து பெருங்கடலில் சங்கமிக்கிறது.

எத்தனை குணங்கள்
உன்னால் எத்தனை பயன்கள்..
அருவியாய் விழுந்து எங்கள் மனதை குளிர் விக்கிறாய்.
ஆறாய் பெருக்கெடுத்து ஓடி எங்கள் வாழ்க்கையை வளம் பெறச் செய்கிறாய்.

உன்னை நம்பி வாழும் மக்களுக்கு நீராதாரமாய், வாழ்வாதாரமாய் விளங்குகிறாய்.
தாமிரத்தை போன்று பரணி எங்கும் மின்னுகிறாய்.

எங்கள் பாவத்தைச் சுமந்து இறுதியில் கடலில் சங்கமிக்கிறாய்.
வற்றாத ஜீவனதியாய் தென்னகத்தின் கங்கையாய் திகழ்கின்றாய்.

எழுதியவர் : கிஷோர் ராம்தாஸ் (12-Jan-15, 6:18 pm)
பார்வை : 4319

மேலே