இயற்க்கை

இயற்க்கை.:

பூமியின் நிர்வாணத்திற்கு கடவுள் போர்த்திய பட்டாடை..!
மரங்கள், செடிகள், சோலைகள் என்னும் பச்சை பட்டு...!இயற்க்கை.

சுட்டெரிக்கும் சூரியனாய்..!
குளிர்விக்கும் மேகங்களாய்..!
விண்ணைக் கிழிக்கும் மலைகளாய்..!
வற்றாத ஜீவனதியாய்..!
ஒளிரூட்டும் நிலவாய், நட்சத்திரமாய்..!
இப்படி எங்கு நோக்கினும் இயற்க்கை

பூத்துக் குலுங்கும் பூக்களுக்கும்..!
விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும்..!
நான்கு கால் விலங்கினங்களுக்கும்..! மத்தியில் மனிதன் பிறந்தது பிரபஞ்சத்தின் விந்தை..!
பிரம்மனின் சித்து விளையாட்டு. இயற்க்கை

மனிதனின் கர்வத்தை அடக்க..!
கடலுடைத்து..!
நிலம் பிளந்து..! எரிமலையாய் வெடித்து..!
தென்றலை புயலாக்கி..!
மழையை வெள்ளமாக்கி..!
மனிதனுக்கு தன் இருப்பை நிலைநிறுத்தி..!
நமது அறியாமையை அகற்றுவது இயற்க்கை

ஈரமற்ற கல்லில் வடித்த சிலை என்றாலும்..!
கேட்டதை கொடுத்து
தீமையை அழித்து
தர்மத்தை நிலை நிறுத்தும் கடவுளும், மனிதனும். இயற்க்கை.

எழுதியவர் : கிஷோர் ராம்தாஸ் (12-Jan-15, 6:22 pm)
Tanglish : iyarkkai
பார்வை : 550

புதிய படைப்புகள்

மேலே