பொங்கலோ பொங்கல் ---பூவிதழ்
![](https://eluthu.com/images/loading.gif)
பொங்கலோ பொங்கல் !
காலநிலை இப்போ மாறிப்போச்சு
பருவமழ ஏதோ தூறிபோச்சு
காவிரியும் கடனுக்கு வந்துபோச்சு
நடவுக்கு பட்ட கடன் குட்டிபோட்டு குடும்பமாச்சு
நட்ட பயிர் விளையும்முன்னே நன்றி கேட்டு பொங்கல் வந்துடுச்சு
நன்றி கடனுக்கு வைக்கிறோம் பொங்கல்
நாங்கள் கடன்பட்டு வைக்கிறோம் பொங்கல் இருந்தும்
நன்றிசொல்ல மறக்கவில்ல கதிரவனுக்கும் கால்நடைக்கும்
எங்களை மறந்துவிட்ட மக்களைப்போல் !
பொங்கலோ பொங்கல் !