முடியும்

முடியும் போதுதான்
பிறக்கிறோம்..
முடியும் போதுதான்..
இறக்கிறோம்..
முடியும் போதுதான்
படிக்கிறோம்..
வளர்கிறோம்..
வாழ்கிறோம்..
நாம்..
முடிப்பது எல்லாம்..
முடியாதவைகள்..
அல்ல..!
நம்மால்
முடியாதவைகள் எல்லாம்..
முடிந்து போனவை அல்ல!
முடிவுகள்தான்..
முடிக்க வைக்கின்றன !

எழுதியவர் : கருணா (13-Jan-15, 4:04 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : mudiyum
பார்வை : 186

மேலே