கருவி ஒன்று வேண்டும்

விஞ்ஞானமே..
எனக்கொரு கருவி செய்து கொடு..
தேனாய் கதைகள் சொல்லி
அன்பாய் வளர்த்த அப்பாவின்
அருகாமையை கண்முன்னே கொண்டு வர
எனக்கொரு கருவி செய்து கொடு..!

அவளைத் தவிர யாருமே
ஒன்று சொல்லிடப் பொறுக்காத
அன்பு அன்னையை எதிரில் வரச் செய்ய
எனக்கொரு கருவி செய்து கொடு..!

பதின் வயது தோழர்களின் ..தோழிகளின்..
விளையாட்டு நேரங்களை
சொடுக்கினால் வரச் செய்ய ..
எனக்கொரு கருவி செய்து கொடு..

இடர்படும் நேரமெல்லாம்
உதவிட்ட நண்பர்களின்
உற்சாக உரையாடல் பார்ப்பதற்கு...
எனக்கொரு கருவி செய்து கொடு..!

கடந்து போன நினைவு ஆறு
என் ஊர்வழியே செல்ல வைக்க
எனக்கொரு கருவி செய்து கொடு..!
..
இல்லையென்றால்..
நல்லவற்றை மட்டும்
நான் மறக்காமல் இருப்பதற்கு
எனக்கொரு கருவி செய்து கொடு..

எழுதியவர் : கருணா (13-Jan-15, 4:24 pm)
Tanglish : karuvi ondru vENtum
பார்வை : 129

மேலே