குறும்புக்கார என்னவன்

கார்மேகங்கள் கலந்து
உருவான உடல் என்றாலும்
உன் நிறம்
என்னை போல் உன்னை காண்போரையும்
கவர்ந்து விடுகின்றது மாயம் தான்..!!
கூரிய அம்பாக விழியும்
வில்லாக புருவமும்
கொலைகாரா என்னை கொண்டு புதைக்காதே அனுதினமும் ..!!
எட்டி எட்டி நடக்கையில்
கிட்ட கிட்ட வருகின்றாய்
கோவம் கொண்டு முறைக்கையில்
கை தட்டி தட்டி சிரிக்கின்றாய் ..!!
ராதைக்கேற்ற கண்ணனடி
காற்றில் தூது விடுகின்றாய்
கிருஷ்ணன் செய்யும் சில்மிசத்தை
கண்முன்னே நிருத்துகின்றாய்..!
ஈர்ப்பு விசை எதுவென்று
இதுவரை நான் அறியவில்லை
உன் விழி ஈர்ப்பு விசையின் முன்னே
வேறேதும் நினைவில் இல்லை....!!!!