சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

சாதி ஒழி ! மதம் அழி! சாதி ! (பொங்கல் கவிதை போட்டி 2015)

---

இளைய தலைமுறையே ..எழுந்திரு..!
செல்லரித்துப்போன சாதிமுறையை ..உற்றுப்பார்..
தெரிகிறதா உனக்கு.. அது உன்னையும் அழித்து விடும் என்பது..
மூன்று தலை முறைக்குப் பின் உன் சாதியினன் உன் சாதியில் மணப்பானா?..சொல்..?
பின்னெதற்கு முழுவீச்சில் சாதியின் பேர் சொல்லி சாக்காட்டு கொடுமைகள் ?

விலங்குகள் கூட சாதிகள் மதங்களின் பெயரால் அழித்துக் கொள்வதில்லை தம்மினத்தை.!
மழையோ, வெயிலோ..ஆறோ..கடலோ..மலையோ..காற்றோ..நீரோ..நெருப்போ..
எதுவும் கூட இயற்கையிலே சாதியோ மதமோ பிரிந்தது தருவதில்லை பயனை..!
இன்ன சாதிக்கு இன்று மழை..இன்ன மதத்திற்கு மட்டும் இன்று வெயில்..காற்று..
என்று இருந்திருந்தால்.. தெரிந்திருக்கும் மனிதன் பாடு!

தக்கது மட்டுமே பிழைத்திருக்கும் என்ற தத்துவத்தின் பொருள் தெரியுமா உனக்கு..
சாதியும் மதமும் இன்று வரை அவற்றுக்குள் தக்கது எது என்று சண்டையிட்டே
தம்மை அழித்துக் கொள்ளும் பூமியா வேண்டும் உனக்கு..?
மனிதனாய் வாழ்வதற்கு சாதியும் மதமும் எதற்கு..?
மண்ணில் மறைந்த பின் மண்ணுக்கும் நெருப்புக்கும் தெரிவதில்லை சாதி மதக் கணக்கு!

சாதிக் கொடுமையினால் சங்கறுத்தது போதும்.. அதை சவக் குழியில் தள்ளு..!
மதப் பாகுபாடுகளால் மனிதத்தை இழந்தது போதும்..அவற்றை தீயிட்டுக் கொளுத்து..!
மண்ணிலே மனித இனம் ஒன்றுதானே .. அனைவரும் ஒன்றுதானே..என்று எண்ணி
வருகின்ற காலமதில் சாதி ஒழி! மதம் அழி! சாதி..! சாதிக்க வேண்டும் நீ!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407

எழுதியவர் : கருணா (15-Jan-15, 3:03 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 319

மேலே