தனிமைப்பட்டவன்
விவாகரத்து
மண்ணும் மரமும் சண்டையிட்டதால்
மடிந்து போயின மலா்கள்...
நதியும் நீரும் சண்டையிட்டதால்
தவித்து போயின மீன்கள்...
நிலவும் கதிரும் சண்டையிட்டதால்
வெறுமையானது வானம்....
அன்னையும் தந்தையும் சண்டையிட்டதால்
தனிமைப்பட்டவன் நான்
மாதமொருமுறை வந்து ஹாஸ்டல் பீஸைகட்டிவிட்டு
முகத்தை காட்டி நியாபகப்படுத்தி விட்டு சென்றாா் -- தந்தை
அவ்வப்பொது வந்து அதிரசம் கொழுக்கட்டையும் தந்து
அன்பைப்பொழிந்து விட்டு சென்றாள் - அன்னை
விடுதிச்சோறும் விரைப்பான வாா்டன் மூஞ்சியும்
பாா்த்து பழகி புளிச்சுப்போச்சு.....
பள்ளிக்கூடமும் நண்பா்களும் பாா்த்திராத
என் குமுறலை
இரவில் போா்வைக்குள் என் தலையணையுடன்
பகிா்ந்து கொள்கிறேன்
அதுதானே என் வேதனையை
வெளியே சொல்லாது
பெற்றோா் பிாிந்து விட்டாராமே என
இரக்கப்படுவோா் சிலா்
ஏழனப்புன்னகை புாிவா் பலா்
பயணச்சீட்டை தொலைத்து விட்டு
வாழ்க்கையை பயணிக்கத் தொடங்கினேன்
போகுமிடம் தொியவில்லை
வழித்துணைக்கும் யாருமில்லை
படைத்தவன் துணையை மட்டும் பொிதென எண்ணி
புறப்பட்டுவிட்டேன் -- பெற்றவா்களால் தனிமைப்படுத்தப்பட்டவன்