இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015

இப்படி நாம் காதலிப்போம் ! (பொங்கல் கவிதை போட்டி 2015)
-----------------------------------------------------------------------------------------

எப்படி காதல் செய்வது..வாய்ப்பின்றிப் போனதே ..
இப்படி எண்ணும் நிலை யாருக்கும் தேவையில்லை..
காதல் என்பது பச்சிலை மீது விழும் பனித்துளி போலத்தான்..
கொஞ்ச நேரமே இருந்த போதிலும் அதன் ஈரத்தை
வேர்வரையில் விட்டுப் போயிருக்கும்..ஆதலால் காதல் செய்வீர்!

பருவத்தின் வாசலில் பந்தல் போட்டுக் கொண்டிருக்கும் இளமையே..
சுயநலம் ஏதுமின்றி.. காமம் கண் மறைத்தலின்றி.. இதயத்தை காதல் செய்வீர்..
இன்னுயிர் போகின்ற நிலையேதான் வந்திடினும் உறுதியாய் காதல் செய்வீர்..
சாதியும் மதமும் உங்களை சதி செய்து வீழ்த்திடாமல் மரிக்கின்ற எண்ணம் விடுத்து
மறிக்கின்ற கூட்டத்தின் மனங்களில் மனமாற்றம் கொண்டு வாரீர் !

இதுதான் காதலா என்று தள்ளிப் போகும் ஏனையோர்க்கு இருக்கின்ற காதல் பல உண்டு ..
அன்பான மனைவியை ஆழமாய் காதலிக்க தடையும் தான் ஏதுமுண்டோ..
பண்பான மனிதரை பாசமிகு நண்பரை பனித்துளியின் ஈரம்போல் காதலிப்பீர்
உங்கள் அன்பினால் அவருக்கு உதவிடும் நோக்கத்தைக் காதல் செய்வீர்..
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத உத்தம குணத்தை காதல் செய்வீர்..!

இன்னமும் உயர்ந்த குணம்,நாகரிகம்,உழைத்தல் நேர்மையாய் இருத்தல்
என்ற மனப்பான்மைதனை காதல் செய்வீர் ..அவற்றையே துணையாய் மணப்பீர்..!
மண்ணில் மா மனிதராய் வாழுகின்ற தெய்வங்களை காதல் செய்வீர்..
அவர் பண்புகள் நாம் பெறவும் மனிதராய் வாழ்வதற்கும் வாழ்க்கையிலே
இப்படி நாம் காதலிப்போம்! இனிமையாய் வாழ்ந்திருப்போம் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407

எழுதியவர் : கருணா (15-Jan-15, 3:34 pm)
பார்வை : 114

மேலே