இது சுலபம் - மணியன்

கடவுள் :- பக்தா உன் தவம் கண்டு மெச்சினேன்.என்ன வரம் வேண்டும் கேள்.

பக்தன் :- செவ்வாய் கிரகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் பல மாடிகளைக் கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்று சொந்தமாக வேண்டும்.

கடவுள் :- இப்போதுதான் மங்கல்யான் சென்றுள்ளது. ஆராய்ச்சி முடிந்து சூழ்நிலை நன்றாக இருந்தால் உனக்குத் தர முடியும்.அது ரொம்ப சிரமம். வேறு ஏதாவது கேள். நான் உடனே நிறைவேற்றித் தருகிறேன்.

பக்தன் :- அப்படின்னா. என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று மட்டும் சொல்லுங்கள் போதும்.

கடவுள் :- உனக்கு செவ்வாயில் கட்டவிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு என்ன பெயர் வைப்பது என்று மட்டும் உடனே கூறு. . .

பக்தன் :- ஹி . . .ஹி. .. ஹி. . . அப்படி வாங்க வழிக்கு. . கடவுளே நன்றி.

















*-*-*-*-*-*-*-*-***-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (16-Jan-15, 11:28 am)
பார்வை : 203

மேலே