எண்ணி துணிக மண்ணில் சிறக்க

நிலவென சொன்னால் ஒளி வீசுமா?!!
நிழல் கண்டு திகைத்தால் உயிர் மீளுமா?!!
துணிவோடு நின்றால் துளிநீராம் கடல்
தன்னம்பிக்கை கொண்டால் வானமுன் மடியில் !

முதுகெலும்பற்ற மண்புழு மண்ணில் துளை போட
ஆயுதமற்ற எலிகள் வலை போட
கால்தடமதில் மிதிபடும் எறும்பூறி கல் தேய
எல்லாமிருந்தும் ஏன்? உன்னால் முடியாது மனிதா!

முயற்சியெனும் விழுது பற்றி முன்னேற பாரு!
வரும் இகழ்ச்சிதனை பாதையாய் மாற்று!
புகழ்ச்சி கண்டு நீயும் மயங்கிட வேண்டா!
இலட்சியம் தொடும் வரை எந்த இச்சையும் வேண்டா!

பயிற்சிதனை பாலமாயாக்கி முயற்சியதை கூட்டு
அனுபவமதை ஆழ விதைத்து நல்நட்பதனை பெருக்கு
கடந்த பாதையை எண்ணிஇலட்சிய பாதையை வகுத்து
கண்ட. கவலை மறந்தே என்றுமின்பமுடன் களித்திரு!

எழுதியவர் : கனகரத்தினம் (20-Jan-15, 2:21 am)
பார்வை : 480

மேலே