நிழல்
எங்கு போனாலும்
என்னோடு கூடவே
வருகிறது ..
என் நிழல்..
என்றான் புதிய சீடன்..
..
திடீரென ஒரு நாள்
என்னைப் பார்த்து
எல்லா சீடர்களும்
சிரிக்கிறார்கள்..குருவே
என்றான்..
ஏன்..என்றார் குரு..
..
என் நிழலை தொலைத்து விட்டேன்
என்றதால்..
என்றான்..!
சரிதான் ..என்றார் குரு..!